/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெல்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம் பெல்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
பெல்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
பெல்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
பெல்ஸ் சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
ADDED : செப் 01, 2025 12:39 AM
சென்னை:சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், பாதசாரிகள் மற்றும் கர்ப்பிணியர் சாலையில் நடந்து சென்று, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
தேனாம்பேட்டை மண்டலம், 114வது வார்டு சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில், 40க்கும் மேற்பட்ட பழைய இருசக்கர வாகன விற்பனை கடைகள் உள்ளன. மேலும், வணிக நிறுவனங்கள், டீ கடைகள், புத்தக விற்பனை கடைகளும் இயங்கி வருகின்றன.
இங்குள்ள வணிக நிறுவனங்களுக்கும், பழைய வாகனங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும் வாகன நிறுத்தம் இல்லாததால், நடைபாதையை வாகன நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர்.
நடைபாதை ஆக்கிரமிப்பால், இச்சாலையில் உள்ள கஸ்துாரி பாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணியர், நோயாளிகள் மட்டுமின்றி பாதசாரிகளும், வேறு வழியின்றி விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் சாலையில் நடந்து செல்கின்றனர்.
பாதசாரிகளுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்தால் அவற்றை, போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும் என, கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், பெல்ஸ் சாலை நடைபாதையை ஆக்கிரமித்துள்ளது குறித்து, பொதுமக்கள் புகார் அளித்தாலும், திருவல்லிக்கேணி போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை.
இதனால், பெல்ஸ் சாலையில் உள்ள கஸ்துாரிபாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணியர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.