/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின்னணு முறை சந்தைப்படுத்தல் சென்னையில் பயிற்சிமின்னணு முறை சந்தைப்படுத்தல் சென்னையில் பயிற்சி
மின்னணு முறை சந்தைப்படுத்தல் சென்னையில் பயிற்சி
மின்னணு முறை சந்தைப்படுத்தல் சென்னையில் பயிற்சி
மின்னணு முறை சந்தைப்படுத்தல் சென்னையில் பயிற்சி
ADDED : பிப் 06, 2024 12:33 AM
சென்னை, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், சென்னையில் நாளை முதல் 9ம் தேதி வரை, மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்கும். இணையதளம் உருவாக்குதல், சமூக ஊடகம் வழியே சந்தைப்படுத்தல் உட்பட பல்வேறு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சி குறித்த கூடுதல் விபரங்களைப்பெற, www.editn.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2225 2081, 2225 2082, 86681 02600, 86681 00181, 70101 43022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.
அரசின் செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.