ADDED : மே 28, 2025 12:13 AM
சென்னை,பெரும்பாக்கம், சேரன் நகரில், 110 கிலோ வோல்ட் திறனில் பெரும்பாக்கம் துணைமின் நிலையம் உள்ளது.
இதன் வளாகத்தில் உள்ள சோழிங்கநல்லுார் செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை காலை 10:30 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
மேடவாக்கம், நன்மங்கலம், ஜல்லடியன்பேட்டை, கவுரிவாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்துார், நாராயணபுரம், சீதலபாக்கம், அரசன்கழனி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் வசிப்போர் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.