/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சார ஸ்கூட்டர் நள்ளிரவில் தீக்கிரை மின்சார ஸ்கூட்டர் நள்ளிரவில் தீக்கிரை
மின்சார ஸ்கூட்டர் நள்ளிரவில் தீக்கிரை
மின்சார ஸ்கூட்டர் நள்ளிரவில் தீக்கிரை
மின்சார ஸ்கூட்டர் நள்ளிரவில் தீக்கிரை
ADDED : மே 24, 2025 11:51 PM

புழல் :மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் கவுதம், 34; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, நேற்று அதிகாலை 1:00 மணியளவில், போரூரில் இருந்து தன் வீட்டிற்கு 'ஓலா' மின்சார ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில், கதிர்வேடு மேம்பாலம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, வாகனத்தில் இருந்து புகை வந்ததால் சுதாரித்த கவுதம், சாலையோரம் வாகனத்தை நிறுத்தினார். சில நிமிடங்களில் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிய துவங்கியது.
தகவலறிந்து மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், ஸ்கூட்டர் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.