/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் வேளச்சேரியில் எட்டு பேர் காயம் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் வேளச்சேரியில் எட்டு பேர் காயம்
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் வேளச்சேரியில் எட்டு பேர் காயம்
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் வேளச்சேரியில் எட்டு பேர் காயம்
நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் வேளச்சேரியில் எட்டு பேர் காயம்
ADDED : செப் 23, 2025 01:36 AM

வேளச்சேரி:வேளச்சேரியில், அபாய வளைவில் இரண்டு மாநகரப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், எட்டு பேர் காயமடைந்தனர்.
தி.நகரில் இருந்து கிளாம்பாக்கம் நோக்கி, தடம் எண்: வி51இ மாநகர பேருந்து, நேற்று காலை புறப்பட்டது. பேருந்தை, மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பழகன், 45, என்பவர் இயக்கினார்.
அதேபோல், மாம்பாக்கம், கொளத்துாரில் இருந்து தி.நகர் நோக்கி, தடம் எண்: எம்51வி பேருந்து புறப்பட்டது. பேருந்தை, வேளச்சேரியை சேர்ந்த வெங்கடேஸ்வரன், 38, என்பவர் இயக்கினார்.
இரண்டு பேருந்துகளிலும், நின்று பயணிக்கும் வகையில் கூட்டம் இருந்தது. வேளச்சேரி பிரதான சாலை, தண்டீஸ்வரம் குளம் அருகில் உள்ள அபாய வளைவில், இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில், தி.நகரில் இருந்து கிளம்பிய பேருந்தின் ஓட்டுநர் அன்பழகன் மற்றும் பயணியரான பாண்டியன், 27, தினகரன், 30, விமலா, 52, சசிகலா, 60, உள்ளிட்ட எட்டு பேர் காயமடைந்தனர்.
அனைவரும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில், இரண்டு பேருந்துகளின் முன் பாகம் சேதமடைந்தது. இச்சம்பவத்தால், வேளச்சேரி பிரதான சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.