Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின்னணு கழிவு பொருட்கள் வைக்கப்பட்ட கிடங்கு தீக்கிரை

மின்னணு கழிவு பொருட்கள் வைக்கப்பட்ட கிடங்கு தீக்கிரை

மின்னணு கழிவு பொருட்கள் வைக்கப்பட்ட கிடங்கு தீக்கிரை

மின்னணு கழிவு பொருட்கள் வைக்கப்பட்ட கிடங்கு தீக்கிரை

ADDED : பிப் 02, 2024 12:13 AM


Google News
அம்பத்துார், அம்பத்துார் அடுத்த, கொரட்டூர் ஏரியையொட்டி, மேனாம்பேடு அருகே, 10,000 சதுர அடி பரப்பளவில், எஸ்.எஸ்.எஸ்., ஏஜன்சி என்ற தனியார் நிறுவனத்தின் திறந்தவெளி கிடங்கு உள்ளது. இங்கு, பல ஆயிரம் கிலோ அளவுடைய, செயல்படாத ப்ரிஜ், வாஷிங்மிஷின், ஏசி' உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று மாலை, 6:30 மணிக்கு, மின் கோளாறு காரணமாக, அங்குள்ள மின்னணு சாதன கழிவு பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. ஏரியையொட்டிய திறந்தவெளி பகுதி என்பதால், அங்கு வீசிய பலத்த காற்று காரணமாக, கிடங்கின் அனைத்து பகுதிக்கும், தீ வேகமாக பரவியது.

மேலும், காஸ், மின்னணு மற்றும் அமிலக்கலவை உள்ளிட்ட பொருட்களும் வெடித்து சிதறின. இதனால் பரவிய அடர்த்தியான புகையால், சுற்று வட்டாரங்களில் வசிப்போருக்கு மூச்சுத்திணறல், கண், தொண்டை எரிச்சல் உள்ளிட்ட உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அம்பத்துார், ஆவடி, வில்லிவாக்கம், அண்ணா நகர், ஜெ.ஜெ., நகர், புழல் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்க போராடினர்.

மூன்று மணி நேரத்தை கடந்தும், தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. தீ விபத்து குறித்து, அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். தீ விபத்தை கட்டுப்படுத்தும் வகையில், சுற்றுவட்டாரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us