ADDED : ஜூன் 11, 2025 12:21 AM
சென்னை, விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த, 3 மாதமாக ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசியை பயன்படுத்தி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினமும் ஆன்லைன் வாயிலாக, 400 ரூபாய் செலுத்தி வாங்கிய போதை ஊசியை, பயன்படுத்தி உள்ளார்.
சிறிது நேரத்தில் உடல்நிலை பாதித்து, சிறுநீரில் ரத்தம் கலந்து வந்ததால் பயந்து போன சிறுவன், அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.