/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வாக்குறுதி நிறைவேற்றுவது அவசியம் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வாக்குறுதி நிறைவேற்றுவது அவசியம்
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வாக்குறுதி நிறைவேற்றுவது அவசியம்
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வாக்குறுதி நிறைவேற்றுவது அவசியம்
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வாக்குறுதி நிறைவேற்றுவது அவசியம்
ADDED : ஜூன் 15, 2025 12:37 AM
திருவொற்றியூர், மத்திய -- மாநில அரசுகள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், சொத்து வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, மார்க்.கம்யூ., கட்சி தெற்கு பகுதி சார்பில், நேற்று மாலை திருவொற்றியூர், கான்கார்ட் சந்திப்பு அருகே, பிரசார பயணம் நடந்தது.
இதில் பங்கேற்ற, மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி:
வரும், 22 ம் தேதி, மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., அரசியல் மாநாடு நடத்தவுள்ளது. ஆன்மிக மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடத்துவதை, முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்.
மத்திய அரசில், ஒன்பது லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அதை நிறைவேற்ற நடவடிக்கை இல்லை. தமிழகத்திலும், காலி பணியிடங்கள் உள்ளன. அதை நிரப்பிட தமிழக அரசு முழு வீச்சில் ஈடுபட வேண்டும்.
தி.மு.க., துணை பொதுச் செயலர் ராசா, 98.50 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றம் என்ற பதில், அமித்ஷாவிற்கு தான். எங்களுக்கு சதவீதம் முக்கியமல்ல. காலி பணியிடம் நிரப்புவது, குடிமனை பட்டா, மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த அத்தியாவசிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
அது தான் மக்களுக்கு நல்லது. தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர, அது அவசியம். விஜய் நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவுவது, வரவேற்க கூடிய நடைமுறை தான்.
இவ்வாறு, அவர் கூறினார்.