ADDED : செப் 16, 2025 01:15 AM
புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, தி.மு.க., ஆட்சியில் நிலவும் அதிகார அத்துமீறல்களையும், சட்டம் - ஒழுங்கு சீரழிவையும் ஊடகம் வாயிலாக எடுத்துரைத்து உள்ளார்.
அவர்மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பொய் வழக்கு புனைந்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், குண்டர் சட்டத்திலும் அரசு கைது செய்துள்ளது. இது, ஜனநாயக படுகொலை. பேச்சுரிமை, கருத்துரிமை என, மேடைக்கு மேடை பேசும் தி.மு.க., அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அடக்கி, ஒடுக்கி, இரட்டை வேடத்தை காட்டுகிறது.
தமிழகத்தில் கருத்து சுதந்திரம் முற்று முழுதாக காவு கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரம் நிலையானது எனும் மமதையில் தி.மு.க., அரசு உள்ளது. இதற்கு மக்கள் முடிவு கட்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.