Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நீரோட்டம் பார்த்து கட்டப்படாத வடிகால்வாய்கள் அடையாறு பகுதியில் வெள்ள பாதிப்பு அபாயம் மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

நீரோட்டம் பார்த்து கட்டப்படாத வடிகால்வாய்கள் அடையாறு பகுதியில் வெள்ள பாதிப்பு அபாயம் மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

நீரோட்டம் பார்த்து கட்டப்படாத வடிகால்வாய்கள் அடையாறு பகுதியில் வெள்ள பாதிப்பு அபாயம் மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

நீரோட்டம் பார்த்து கட்டப்படாத வடிகால்வாய்கள் அடையாறு பகுதியில் வெள்ள பாதிப்பு அபாயம் மண்டல கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ADDED : செப் 11, 2025 02:37 AM


Google News
அடையாறு :நீரோட்டம் பார்த்து கட்டப்படாத வடிகால்வாய்களால், அடையாறு பகுதியில் வெள்ள பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மண்டல குழு கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல அதிகாரி ஆர்டின் முன்னிலையில், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

சுதந்திர தினத்தன்று, 2வது சிறந்த மண்டலமாக தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

மோகன்குமார், தி.மு.க., 168வது வார்டு: கிண்டி, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வடிகால்வாய்கள் துார்வாரப்படாததால் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. சிட்கோ வளாகத்தில் உள்ள கேட்பாரற்ற வாகனங்களை அகற்ற வேண்டும்.

கதிர் முருகன், அ.தி.மு.க., 170வது வார்டு: கோட்டூர் புரத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ஏரியா சபை கூட்டத்தை விடுமுறை நாளில் நடத்துவதால், பெரும்பாலான அதிகாரிகள் பங்கேற்பதில்லை.

கீதா, தி.மு.க., 171வது வார்டு: ஆர்.ஏ.புரத்தில் சேதமடைந்த சாலைகளை, மழைக்கு முன் சீரமைக்க வேண்டும். காமராஜர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சுபாஷினி, காங்கிரஸ், 173வது வார்டு: காமராஜர் நகரில் வடிகால்வாய் பணி துவங்காததால், வரும் பருவமழைக்கு வெள்ள பாதிப்பு ஏற்படும். சாலையை புதுப்பித்த உடனே, கேபிள் பதிக்க பள்ளம் தோண்டும் நடவடிக்கையை தடுக்க வேண்டும்.

ராதிகா, தி.மு.க., 174வது வார்டு: சாஸ்திரி நகர், பெசன்ட் நகரில் உள்ள வடிகால்வாய்கள், நீரோட்டம் பார்த்து கட்டப்படாததால் வெள்ளம் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், வரும் பருவ மழைக்கு அடையாறு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எல்.பி., சாலையில் வெள்ளம் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேஸ்வரி, தி.மு.க., 175வது வார்டு: அம்பேத்கர் நகர் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வேளச்சேரி ஏரியில் ஆகாயத்தாமரையை அகற்றாத தால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.

ஆனந்தம், தி.மு.க., 176வது வார்டு: போக்கு வரத்து நெரிசலுக்கு காரணமான வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள கழிவுநீர் வெளியேற்று நிலையத்தை இடம் மாற்ற, மூன்று ஆண்டுகளாக கூறி வருகிறேன். நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை.

மணிமாறன், தி.மு.க., 177வது வார்டு: வேளச் சேரி யில் உள்ள நீர்த்தேக்கங்களில், ஆகாயத்தாமரையை அகற்றாததால், கொசு தொல்லையும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது .

பாஸ்கரன், தி.மு.க., 178வது வார்டு: தரமணியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சி.எஸ்.ஆர்., நிதி வாங்கி பல ஆண்டுகள் ஆகியும், அதை முறையாக பயன்படுத்தவில்லை.

கயல்விழி, தி.மு.க., 179வது வார்டு: லட்சுமிபுரம், ராஜா சீனிவாசன் நகரில் உள்ள கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். ஓடை குப்பம் மயானத்தை சீரமைக் காததால் மக்கள் சிரமப் படுகின்றனர்.

விசாலாட்சி, தி.மு.க., 180வது வார்டு: திருவான்மியூரில் வடிகால்வாய் பணியின்போது சேதமடையும் மின் கேபிள்களால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

கவுன்சிலர்களின் குற்றச் சாட்டுகளுக்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். தொடர்ந்து, சாலை, வடிகால்வாய் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us