/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 10 சதவீத மின் கம்பங்கள் கூட சீரமைக்கப்படவில்லை தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு 10 சதவீத மின் கம்பங்கள் கூட சீரமைக்கப்படவில்லை தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
10 சதவீத மின் கம்பங்கள் கூட சீரமைக்கப்படவில்லை தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
10 சதவீத மின் கம்பங்கள் கூட சீரமைக்கப்படவில்லை தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
10 சதவீத மின் கம்பங்கள் கூட சீரமைக்கப்படவில்லை தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 13, 2025 12:18 AM
அம்பத்துார், அம்பத்துார் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் மூர்த்தி தலைமையில் மன்ற கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் மண்டல உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் சுகாதாரம், மெட்ரோ, மின்சாரம் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பல்வேறு துறை சார்ந்த 80க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஏரியா பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது:
பானுபிரியா, 79வது வார்டு காங்., கவுன்சிலர்:
குப்பை அகற்றும் பணியை மேற்கொள்ளும் பேட்டரி வாகனங்கள், முறையாக இயங்குவது இல்லை. அதை சார்ஜ் போடுவதில் சிக்கல் உள்ளது. மேலும், அதில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கி சரி செய்வதிலும் கால தாமதம் ஏற்படுகிறது. 79வது வார்டில் மகளிர் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.
திலகர், 92வது வார்டு காங்., கவுன்சிலர்:
புதிதாக திறக்கப்பட்ட அரசு கட்டடத்தின் மேல், அரசு நுாலகம் அமைக்க வேண்டும். மழை நேரத்தில், பம்பிங் ஸ்டேஷன் முறையாக செயல்படாததால், சாலையில் மழை நீர் தேங்குகிறது. அதில் கழிவு நீரும் கலக்கிறது. அதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.
ரமேஷ், 82வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:
சமீபத்தில் பெய்த மழையின்போது நள்ளிரவு 11:00 மணிக்கு மேல், 20 பேருக்கும் மேல் என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சாலையில் மழை நீர் தேங்கியுள்ளதாக கூறினர். ஊழியர்கள், மழை நீரை வெளியேற்றும் மோட்டரை முறையாக இயக்குகின்றனரா என்று தெரியவில்லை.
அனைத்து வார்டுகளிலும், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. எனது வார்டில் சேதமடைந்த மின்கம்பங்களில், 10 சதவீதம் கூட சீரமைக்கப்படவில்லை. 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், சிதலமடைந்து உதிர்ந்து, எலும்புக்கூடாக உள்ளது.
ஜான், 84வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்:
ஆவடி, அயப்பாக்கம் உட்பட ஐந்து ஏரிகளில் இருந்து, அம்பத்துார் ஏரிக்கு உபரி நீர் வருகிறது. மழை காலங்களில், அம்பத்துார் ஏரியில் இருந்து, 500 கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்படும். ஜீரோ பாயின்ட் பகுதியில், 30 முதல் 50 கன அடி உபரி நீர் மட்டுமே செல்ல முடியும். அதனால், 300 கன அடி நீர் கொரட்டூர் வீட்டு வசதி வாரிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் பாய்கிறது.
ரூ.ஒரு கோடி மதிப்பில் ஸ்டேஷன் ரோட்டில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட உள்ளது. அங்கு அடிக்கடி, கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதால், அதற்கு தீர்வு காணாமல் சாலை அமைத்தால் தெரிந்தே, ஒரு கோடி ரூபாயை ஆற்றில் விட்டது போல் அமைந்துவிடும்.
இதற்கு பதிலளித்து பேசிய அம்பத்துார் மண்டலக்குழு தலைவர் மூர்த்தி, ''வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய பைப் லைன் அமைக்கும் பணி முடிந்து விடும். அதன் பின், குழாயில் உடைப்பு பிரச்னை இருக்காது,'' என்றார்.