ADDED : ஜன 13, 2024 12:14 AM
சென்னை,செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கர குளோபல் அகாடமியில் இன்று துவங்குகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மொத்தம் ஏழு சுற்றுகள் 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில் நடக்கின்றன.
பங்கேற்க விரும்புவோர், 98845 95035 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.