/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தினமலர் செய்தி எதிரொலி மூலக்கொத்தளம் இருவழி சாலையாக மாற்றி அமைப்பு பேசின் பாலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி மூலக்கொத்தளம் இருவழி சாலையாக மாற்றி அமைப்பு பேசின் பாலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி மூலக்கொத்தளம் இருவழி சாலையாக மாற்றி அமைப்பு பேசின் பாலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி மூலக்கொத்தளம் இருவழி சாலையாக மாற்றி அமைப்பு பேசின் பாலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
தினமலர் செய்தி எதிரொலி மூலக்கொத்தளம் இருவழி சாலையாக மாற்றி அமைப்பு பேசின் பாலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
ADDED : ஜூன் 11, 2025 01:12 AM

மூலக்கொத்தளம், சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் வால்டாக்ஸ் சாலையில் பழமையான யானைகவுனி மேம்பாலம் உள்ளது. 1933ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், சிதிலமடைந்து காணப்பட்டதால், 2016ல் பாலம் மூடப்பட்டது.
பின், 79.78 கோடி ரூபாய் நிதியில், புதிய மேம்பாலம் கட்ட முடிவெடுக்கப்பட்டு, 2020ல், பழமையான பாலம் இடித்து அகற்றப்பட்டது. பின், 2020ம் ஆண்டு, ஆகஸ்டில் புதிய மேம்பால பணி துவங்கப்பட்டது.
இந்நிலையில், கட்டுமான பணிகள் முடிந்து, எட்டு ஆண்டுகளுக்குபின், 2024, மார்ச் மாதம் யானைகவுனி மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
மேம்பாலம் திறந்து ஓராண்டாகியும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், மாற்று பாதையில் இயக்கப்படும் வாகனங்கள், மூலக்கொத்தளம் வழியாக செல்வதால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேசின் மேம்பாலத்தில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதியடைந்தனர்.
யானைகவுனி மேம்பாலம் திறக்கப்பட்ட பிறகும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை என, வாகன ஓட்டிகள் குமுறினர். இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த ஏப்., 23ம் தேதி, 'யானைகவுனி மேம்பாலம் திறந்தும் குறையாத போக்குவரத்து நெரிசல்' என்ற தலைப்பில், படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து மூலக்கொத்தளம் சந்திப்பு இருவழி சாலையாக மாற்றியமைக்கப்பட்டு, நார்த்வால் ரோடு, வால்டாக்ஸ் சாலை, பேசின்பாலம் சாலையில் வழியாக வியாசர்பாடிக்கு போக்குவரத்து திரும்பி விடப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.