/உள்ளூர் செய்திகள்/சென்னை/டிசி செய்தி 'மனிதநேயம்' 71 மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றிடிசி செய்தி 'மனிதநேயம்' 71 மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
டிசி செய்தி 'மனிதநேயம்' 71 மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
டிசி செய்தி 'மனிதநேயம்' 71 மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
டிசி செய்தி 'மனிதநேயம்' 71 மாணவர்கள் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
ADDED : ஜூன் 13, 2025 12:30 AM
சென்னை, மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட பல்வேறு பதவிகளுக்கான, 1,129 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த மாதம் 25ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடந்தது.
இதில் வெற்றி பெற்று, முதன்மை தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதில், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் 'மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியக'த்தில் பயிற்சி பெற்று தேர்வு எழுதியவர்களில், 57 மாணவர்கள், 14 மாணவியர் என, 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான நேரடி வகுப்புகள், பயிற்சிகள், வல்லுநர் குழு ஆலோசனை மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களில் தகுதியின் அடிப்படையில் தங்குவதற்கான விடுதி, உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என, மனிதநேய அறக்கட்டளை நிறுவன தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் சி.ஐ.டி., நகரில் உள்ள பயிற்சி மையத்தில் நேரிலோ, 044 2435 8373, 2433 0095 98404 39393, 84284 31107 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.