ADDED : ஜன 11, 2024 01:33 AM

சேதமடைந்த 'மேன் ஹோல்'
அண்ணா நகர் மண்டலம் 105வது வார்டில் அரும்பாக்கம், திருக்குமரபுரம் உள்ளது. இங்குள்ள பல்வேறு தெருக்களில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள பிரதான சாலையில்,'மேன்ஹோல்' உடைந்து, சேதமடைந்து உள்ளது.
இதனால், அவ்வழியாக நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளும், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, 'மேன்ஹோல்' மூடியை சீரமைக்க வேண்டும்.