/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'இன்ஸ்டா'வில் கிண்டல் சிறுவனுக்கு வெட்டு 'இன்ஸ்டா'வில் கிண்டல் சிறுவனுக்கு வெட்டு
'இன்ஸ்டா'வில் கிண்டல் சிறுவனுக்கு வெட்டு
'இன்ஸ்டா'வில் கிண்டல் சிறுவனுக்கு வெட்டு
'இன்ஸ்டா'வில் கிண்டல் சிறுவனுக்கு வெட்டு
ADDED : மே 25, 2025 12:09 AM
சைதாப்பேட்டை : சைதாப்பேட்டை, ஜோதியமாள் நகரில், 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட பெரும்பாலான சிறுவர்கள் மொபைல் போன் வைத்துள்ளனர்.
இதில் சிலர், இன்ஸ்டாகிராமில் பிறரின் புகைப்படம், பொது நிகழ்வு படங்களை பதிவேற்றி, கிண்டல் செய்வதும், அதற்கு பதில் போடுவதுமாக இருந்தனர்.
இதில், இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டுள்ளனர். நேற்று நடந்த தகராறில், 15 வயதுள்ள ஒரு சிறுவனை, ஏழு பேர் சேர்ந்து சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
இதில், கழுத்து, இடுப்பு, கை, மார்பு என, பல இடங்களில் காயமடைந்த சிறுவன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சைதாப்பேட்டை போலீசார் விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த மனோஜ், 21, மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 6 பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. தலைமறைவான அவர்களை போலீசார் தேடுகின்றனர்.