ADDED : ஜன 07, 2024 12:37 AM
சூளை சூளை, சின்ன கேசவன் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 42. இவர் பழைய ஆடு தொட்டி ரேஷன் கடை அருகே பைக்கில் சென்ற போது, சிலர் இவரை வழிமறித்து கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் இடது கழுத்து மற்றும் வலது கையில் வெட்டு காயம் பட்டது.
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் தி.மு.க.,வின் 78 வது வார்டில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் உள்ளார். சம்பவம் குறித்து தினேஷ் என்பவரிடம் பேசின்பாலம் காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.