/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிளாஸ்டிக் பொருள் விற்றால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை பிளாஸ்டிக் பொருள் விற்றால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை
பிளாஸ்டிக் பொருள் விற்றால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை
பிளாஸ்டிக் பொருள் விற்றால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை
பிளாஸ்டிக் பொருள் விற்றால் ரூ.1 லட்சம் வரை அபராதம் மாநகராட்சி எச்சரிக்கை
ADDED : செப் 25, 2025 12:47 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றாலோ, பயன்படுத்தினாலோ, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசாணை எண்: 35ன் படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் ஸ்பூன், போர்க், கத்தி, பிளாஸ்டிக் தட்டு, உணவு பொட்டலத்திற்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் அல்லது ஒட்டும் படலம், சாப்பாட்டு மேஜையில் விரிக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள். பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தகடு, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித கோப்பை, பிளாஸ்டிக் தேநீர் கோப்பை, பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய், பிளாஸ்டிக் குச்சிகளை கொண்ட ஐஸ்கிரீம், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன், பிளாஸ்டிக் கரண்டி மற்றும் பிளாஸ்டிக் கத்தி ஆகிய பொருட்கள், தமிழக அரசால் விற்பனை செய்வதற்கும், பயன்பாட்டிற்கும் தடை செய்யப்பட்டுள்ளன.
எனவே, வணிக நிறுவனங்கள் விதிகளை மீறி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், பொருட்களை பறிமுதல் செய்வதுடன், 10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.