Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தெருநாய்களுக்கு உணவளிக்க 400 இடம் தேடும் மாநகராட்சி

தெருநாய்களுக்கு உணவளிக்க 400 இடம் தேடும் மாநகராட்சி

தெருநாய்களுக்கு உணவளிக்க 400 இடம் தேடும் மாநகராட்சி

தெருநாய்களுக்கு உணவளிக்க 400 இடம் தேடும் மாநகராட்சி

ADDED : செப் 23, 2025 01:13 AM


Google News
சென்னை:சென்னையில் தெருநாய் களுக்கு உணவளிப்பதற்கான, 400 இடங்களை தேர்வு செய்யும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.

நாடு முழுதும் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து இருப்பதுடன், மனிதர்களை கடித்து குதறும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

அத்துடன், நாய்க் கடியால் பாதிக்கப்பட்டு, 'ரேபிஸ்' நோயால் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றம் சமீபத்தில், தெருநாய்களுக்கு உணவு வழங்க தனி இடங்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.

இதன்படி, வார்டுக்கு இரண்டு இடங்கள் என, 400 இடங்களில் தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி கால்நடை அலுவலர்கள் கூறியதாவது:

சென்னையில், 400 இடங்களில் மட்டுமே தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இந்த இடங்கள், மாநகராட்சி கண்காணிப்புக்கு உட்பட்டு இருக்கும்.

குறிப்பாக, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.

தெருநாய்கள் மனிதர்களை துரத்தி கடிக்க முயன்றால், அங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ஆக்ரோஷமான நாயை பிடித்து சிகிச்சை அளிக்கப்படும்.

அனுமதிக்கப்படாத மற்ற இடங்களில் உணவு அளிப்பவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

'ரேபிஸ்' நோய் பாதிப்புள்ள நாய்களை பராமரிப்பதற்காக, பிரத்யேக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

சென்னையில், 60,000 தெருநாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும், 20 நாட்களில், அனைத்து மண்டலங்களில் உள்ள நாய்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us