/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சுவர் சரிந்து விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் பலி சுவர் சரிந்து விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் பலி
சுவர் சரிந்து விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் பலி
சுவர் சரிந்து விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் பலி
சுவர் சரிந்து விழுந்ததில் ஒப்பந்த ஊழியர் பலி
ADDED : மே 20, 2025 01:43 AM
சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், போட் கிளப் சாலையில், புதிதாக கட்டடம் கட்டும் பணியில், தனியார் கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இப்பணி மேற்கொள்ளப்படும் இடத்திற்கு அருகே, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியில், நேற்று ஈடுபட்டிருந்தனர்.
இரவு, 7:00 மணிக்கு, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்ததில், வடிகால்வாய் பணியில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த சமர் சர்தார், 50, என்பவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அபிராமபுரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், வடமாநில ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான கட்டுமான நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.