/உள்ளூர் செய்திகள்/சென்னை/காந்தி சாலை சந்திப்பில் அத்துமீறும் வாகனங்களால் நெரிசல் அதிகரிப்புகாந்தி சாலை சந்திப்பில் அத்துமீறும் வாகனங்களால் நெரிசல் அதிகரிப்பு
காந்தி சாலை சந்திப்பில் அத்துமீறும் வாகனங்களால் நெரிசல் அதிகரிப்பு
காந்தி சாலை சந்திப்பில் அத்துமீறும் வாகனங்களால் நெரிசல் அதிகரிப்பு
காந்தி சாலை சந்திப்பில் அத்துமீறும் வாகனங்களால் நெரிசல் அதிகரிப்பு
ADDED : ஜன 11, 2024 01:28 AM
தாம்பரம், தாம்பரத்தில், ஜி.எஸ்.டி., - காந்தி சாலைகள் சந்திப்பில் கார், ஆட்டோக்கள் விதியை மீறி, இஷ்டத்திற்கு 'யு டர்ன்' செய்வதால், அங்கு, 'பீக் ஹவர்' நேரத்தில் நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது.
தாம்பரத்தில், ஜி.எஸ்.டி.,- காந்தி சாலை சந்திப்பை, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் திரும்பி வரும் போது, இந்த சந்திப்பில் 'யு டர்ன்' எடுத்து, காந்தி சாலை வழியாகவே பேருந்து நிலையத்திற்கு செல்கின்றன.
அதேபோல், குரோம்பேட்டை மார்க்கமாக இருந்து வரும் வாகனங்களில், தாம்பரம்- முடிச்சூர் சாலைக்கு செல்லும், 70 சதவீத வாகனங்கள், இந்த சந்திப்பில் யு டர்ன் எடுத்து செல்கின்றன. இந்த சந்திப்பில், குரோம்பேட்டையில் இருந்து வாகனங்கள் மட்டுமே யு டர்ன் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., சாலையின் மேற்கு பகுதியாக செல்லும் வாகனங்கள், கிழக்கு பகுதி செல்வதற்கு, ராதா பெட்ரோல் பங்க் அருகே யு டர்ன் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான வாகனங்கள் இதை பின்பற்றாமல், காந்தி சாலை சந்திப்பில் இஷ்டத்திற்கு திரும்புகின்றன.
இதனால், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் மத்தியில் தகராறு ஏற்பட்டு, அதன் காரணமாகவும் நெரிசல் அதிகரிக்கிறது. அவ்வப்போது விபத்தும் நடக்கிறது.
அருகே காவல் உதவி மையம் இருந்தும், இப்பிரச்னையை கண்டுக்கொள்வதே இல்லை. எனவே, போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.