/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்பு இல்லை என புகார் ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்பு இல்லை என புகார்
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்பு இல்லை என புகார்
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்பு இல்லை என புகார்
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் மருத்துவ கட்டமைப்பு இல்லை என புகார்
ADDED : ஜூன் 01, 2025 01:20 AM
சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரக்கோரி, அம்மருத்துவமனை முதல்வரிடம், பாரத் இந்து முன்னணியினர் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, பாரத் இந்து முன்னணி மாநில தலைவர் பிரபு, மருத்துவமனை முதல்வர் அரவிந்திடம் வழங்கிய மனு விபரம்:
ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், அ.தி.மு.க., ஆட்சியில் அனைத்து வசதிகளும் உடைய மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. இதனால், நோயாளிகள் பெரிதும் பயன் அடைந்தனர்.
தி.மு.க., ஆட்சியில், இங்கு போதிய வசதி இல்லை; மருத்துவ கட்டமைப்பு, டாக்டர்கள் இல்லை. இதனால், இங்கு வரும் நோயாளிகளை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் ராஜிவ் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்புகின்றனர்.
இதன் அருகாமையிலேயே, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை இருந்தும், அங்கும் வசதிகள் இல்லை என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு காண டாக்டர்களோ, மருத்துவ கட்டமைப்போ, அங்கு இல்லாத நிலை உள்ளது.
யார் ஆட்சியில் எந்த திட்டத்தை துவங்கினர் என்பது முக்கியமில்லை. தமிழகத்தை யார் ஆண்டாலும், மக்கள் நலனுக்காகவும், பயன்பாட்டிற்காகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.