Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்த குழு

சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்த குழு

சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்த குழு

சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்த குழு

ADDED : ஜூன் 05, 2025 11:38 PM


Google News
சென்னை சென்னையில் சாலையோர வியாபாரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில், மண்டல வாரியாக நகர விற்பனை குழு அமைக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியால், 35,588 சாலையோர வியாபாரிகள் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். அதையும் மீறி, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் புற்றீசல் போல் அதிகரித்துள்ளன.

இவற்றை ஒழுங்குப்படுத்தும் வகையில், சென்னை மாநகராட்சி தலைமையில் நகர விற்பனை குழு செயல்பட்டு வருகிறது.

இக்குழு, 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர வியாபாரத்திற்கு அனுமதிக்க பட்டியல் தயாரித்தது.

மருத்துவமனை அருகாமை, மக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட இடங்களில் சாலையோர வியாபாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதற்கு, சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மண்டல வாரியாக நகர விற்பனை குழு அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் விற்பனை ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்தின்படி, வட்டார துணை கமிஷனர் தலைமையில், ஒவ்வொரு மண்டலத்திற்கும், 14 உறுப்பினர்களை உடைய நகர விற்பனை குழு அமைக்கப்பட உள்ளது.

இக்குழுவில், காவல்துறை மற்றும் மாநராட்சி அதிகாரிகளுடன், சாலையோர வியாபாரிகளில் இருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி, வரும் 16 முதல் 18ம் தேதி வரை அந்தந்த மண்டலங்களில் தேர்தல் அதிகாரிகளால் வேட்புமனு படிவம் இலவசமாக வழங்கப்படும். வரும், 18ம் தேதி வேட்பு மனுக்கள் பெறப்படும். வரும் 26ம் அன்று ஓட்டுப்பதிவு, 27ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும்.

இத்தேர்தலுக்கான சாலையோர வியாபாரிகளின் பெயர் முகவரி அடங்கிய வாக்காளர் பட்டியல், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வட்டார துணை கமிஷனர்கள் தலைமையில், நகர விற்பனை குழு செயல்பாட்டுக்கு வரும்போது, மாநகராட்சி கமிஷனர் தலைமையில் இயங்கும் நகர விற்பனை குழு கலைக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us