ADDED : ஜன 31, 2024 12:15 AM
மணலி, மணலி, சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் தேவன்பு. இவரது மகன் பால் பெஞ்சமின், 18. அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். பால் பெஞ்சமினை ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணலி போலீசார் விசாரிக்கின்றனர்.