/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெண்ணிடம் நகை பறித்த கல்லுாரி மாணவர் கைதுபெண்ணிடம் நகை பறித்த கல்லுாரி மாணவர் கைது
பெண்ணிடம் நகை பறித்த கல்லுாரி மாணவர் கைது
பெண்ணிடம் நகை பறித்த கல்லுாரி மாணவர் கைது
பெண்ணிடம் நகை பறித்த கல்லுாரி மாணவர் கைது
ADDED : ஜன 05, 2024 12:43 AM
வேளச்சேரி, வேளச்சேரி, கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சவுந்தர்யா, 23; தனியார் வங்கி ஊழியர். கடந்த 29ம் தேதி, வேளச்சேரி மேம்பாலத்தில் நடந்து சென்றார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த நபர், சவுந்தர்யா அணிந்திருந்த, 10 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
புகாரின்படி வேளச்சேரி போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் வேளச்சேரி, திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த புவனேஸ்வரன், 20, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
கல்லுாரி மாணவரான இவர், காதலியுடன் சுற்றுலா செல்ல, 'நம்பர் பிளேட்' இல்லாத இருசக்கர வாகனத்தில் சென்று, நகை பறித்ததும், அதை நகைக்கடை ஒன்றில் விற்றதும் தெரியவந்தது.
மாணவரை கைது செய்த போலீசார், நகைக்கடையில் இருந்த, 10 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். நகையை வாங்கிய நகைக்கடை உரிமையாளரிடமும் விசாரிக்கின்றனர்.