/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பைக் மீது லாரி மோதல் கிளினிக் உதவியாளர் பலி பைக் மீது லாரி மோதல் கிளினிக் உதவியாளர் பலி
பைக் மீது லாரி மோதல் கிளினிக் உதவியாளர் பலி
பைக் மீது லாரி மோதல் கிளினிக் உதவியாளர் பலி
பைக் மீது லாரி மோதல் கிளினிக் உதவியாளர் பலி
ADDED : ஜூன் 11, 2025 01:04 AM
சேலையூர், செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் பிராங்க்ளின், 45. இவர், பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கிளினிக்கில், உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, பணிமுடிந்து, பேட்டரி இருசக்கர வாகனத்தில், மேடவாக்கம் - மாம்பாக்கம் சாலை வழியாக வீட்டிற்கு சென்றார். மதுரப்பாக்கம் வனத்துறை அருகே சென்ற போது, எதிரே வந்த லாரி ஒன்று, அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த பிராங்க்ளின், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிய லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரை தேடி வருகின்றனர்.