/உள்ளூர் செய்திகள்/சென்னை/மக்களுடன் முதல்வர் இரண்டு நாள் முகாம்மக்களுடன் முதல்வர் இரண்டு நாள் முகாம்
மக்களுடன் முதல்வர் இரண்டு நாள் முகாம்
மக்களுடன் முதல்வர் இரண்டு நாள் முகாம்
மக்களுடன் முதல்வர் இரண்டு நாள் முகாம்
ADDED : ஜன 05, 2024 12:27 AM
சென்னை,சென்னையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் இன்று, நாளை என, இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' சிறப்பு திட்ட முகாம்கள் நடந்து வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கு, மண்டலதோறும் முகாம் நடைபெற உள்ளது.
இதில், கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, காலிமனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
முகாம்கள் நடைபெறும் இடங்களை https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.