/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்னைக்கு 26.5 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்னைக்கு 26.5 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்னைக்கு 26.5 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்னைக்கு 26.5 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சென்னைக்கு 26.5 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : செப் 21, 2025 01:45 AM

பூந்தமல்லி செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சென்னைக்கு, தினம் 26.5 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில், தினம் 53 கோடி லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம், 2008ல் அமைக்கப்பட்டது. இங்கு, செம்பரம்பாக்கம் ஏரி நீர், தினம் 26.5 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், கூடுதலாக 26.5 கோடி லிட்டர் சுத்திகரித்து குடிநீர் வினியோகிக்க, 66.78 கோடி ரூபாய் மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திட்டத்தில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து போரூர் வரை, 11.7 கி.மீ., நீளத்திற்கும், இரண்டாம் பகுதி, பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் இருந்து கோயம்பேடு வரை, 9.2 கி.மீ., நீள த்திற்கும் குழாய் பதிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.
இந்நிலையில், செம்பரம்பாக்கத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்தார்.
மேலும், சென்னை குடிநீர் வாரியத்தில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், 'சென்னை குடிநீர் செயலி' என்ற புதிய மொபைல் போன் செயலியையும் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் வினய், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
'சென்னை குடிநீர்'
செயலி அறிமுகம்
மொ பைல் போனில் , 'சென்னை குடிநீர்' செயலி மூலம் மக்கள் பதிவு செய்யும் புகார்கள் அனைத்தும், ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் மூலம், தானாகவே கணினி வழியாகப் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸாப் வழியாக அனுப்பப்படும். இந்த செயலியில், புகாரின் நிலை குறித் து உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலத்தில் செயலி வடிவமைக் கப்பட்டுள்ளது.