/உள்ளூர் செய்திகள்/சென்னை/செட்டிமேடில் அகழாய்வு சென்னை பல்கலை ஆயத்தம்செட்டிமேடில் அகழாய்வு சென்னை பல்கலை ஆயத்தம்
செட்டிமேடில் அகழாய்வு சென்னை பல்கலை ஆயத்தம்
செட்டிமேடில் அகழாய்வு சென்னை பல்கலை ஆயத்தம்
செட்டிமேடில் அகழாய்வு சென்னை பல்கலை ஆயத்தம்
ADDED : ஜன 25, 2024 12:35 AM

சென்னை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் செட்டிமேடு என்ற கிராமம் உள்ளது. இது, செங்கல்பட்டிலிருந்து திருச்சி செல்லும் சாலையின் இடதுபுறத்தில், 20 கி.மீ. தொலைவில் பாலாற்றங்கரையில் உள்ளது.
இங்கு, சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் கள ஆய்வு செய்தபோது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. இதையடுத்து, மத்திய தொல்லியல் துறையிடம், அங்கு அகழாய்வு செய்ய அனுமதி பெற்றனர். அடுத்த மாதம், அங்கு அகழாய்வு பணியை துவக்க உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:
செட்டிமேட்டில் 5,000 ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களாக மண்பாண்டங்கள், கல் ஆயுதங்களும் கிடைத்ததால், அகழாய்வு செய்ய அனுமதி பெற்றுள்ளோம்.
மாணவர்கள் அடுத்த மாதம் முழுதும், மூன்று குழிகளைத் தோண்டி ஆய்வு செய்வர்.
அதில், புதிய கற்கால மனிதர்களின் வாழ்விடம் குறித்த கூடுதல் சான்றுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.