Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை பல்கலை கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்

சென்னை பல்கலை கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்

சென்னை பல்கலை கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்

சென்னை பல்கலை கோ - கோ லயோலா கல்லுாரி முதலிடம்

ADDED : செப் 19, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
சென்னை, சென்னை பல்கலையின் 'ஏ' மண்டல கோ - கோ போட்டி, குருநானக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடந்தது. போட்டியில், 'ஏ' மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

அரையிறுதி ஆட்டத்தில், லயோலா அணி, 26 - 1 என்ற புள்ளி கணக்கில், ஜேப்பியார் கலை கல்லுாரி அணியை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில், லயோலா கல்லுாரி மற்றும் குருநானக் கல்லுாரி அணிகள் மோதின.

விறுவிறுப்பான ஆட்டத்தில், 13 - 7 என்ற புள்ளி கணக்கில் லயோலா அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித் தது. மூன்றாம் இடத்தை, ஜேப்பியார் கலை கல்லுாரியும், நான்காம் இடத்தை, எஸ்.ஐ.வி.இ.டி., கல்லுாரி அணியும் கைப்பற்றின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us