Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சென்னை வீரர்கள்

மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சென்னை வீரர்கள்

மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சென்னை வீரர்கள்

மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சென்னை வீரர்கள்

ADDED : செப் 01, 2025 12:53 AM


Google News
சென்னை:மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியின், ஆடவருக்கான இறுதி ஆட்டத்தில், சென்னையை சேர்ந்த தருண் - மணிகண்டன் ஆகியோர் மோதுகின்றனர்.

தமிழக டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், ஐந்தாவது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டிகள், ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கின்றன.

மாநிலம் முழுதும் இருந்து வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் தனியாகவும், 13, 15, 17 வயதுக்கு உட்பட்ட நான்கு பிரிவிலும் போட்டிகள் நடக்கின்றன.

நேற்று நடந்த ஆண்களுக்கான முதல் அரையிறுதி ஆட்டத்தில், சென்னையை சேர்ந்த தருண் மற்றும் சித்தீஷ் பாண்டே ஆகியோர் மோதினர். அதில், 4 - 1 என்ற கணக்கில் தருண் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு அரையிறுதியில், சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், 4 - 3 என்ற புள்ளி கணக்கில், மற்றொரு சென்னை வீரர் ரகுராமை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.

பெண்களுக்கான அரையிறுதியில், சென்னை வீராங்கனை யாஷினி, 4 - 1 என்ற புள்ளி கணக்கில், வருமான வரித்துறை அணி வீராங்கனை ஸ்டெல்லினா தீப்தியை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில், ரிசர்வ் வங்கி அணி வீராங்கனை அர்ஷாவர்தனி, 4 - 2 என்ற புள்ளி கணக்கில், சென்னையைச் சேர்ந்த காவியாஸ்ரீயை தோற்கடித்தார். மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்றோர், இன்று நடக்கும் இறுதிப் போட்டிகளில் மோதுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us