/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேசிய யு - 16 டென்னிஸ் தொடர் சென்னை வீராங்கனையர் அசத்தல் தேசிய யு - 16 டென்னிஸ் தொடர் சென்னை வீராங்கனையர் அசத்தல்
தேசிய யு - 16 டென்னிஸ் தொடர் சென்னை வீராங்கனையர் அசத்தல்
தேசிய யு - 16 டென்னிஸ் தொடர் சென்னை வீராங்கனையர் அசத்தல்
தேசிய யு - 16 டென்னிஸ் தொடர் சென்னை வீராங்கனையர் அசத்தல்
UPDATED : ஜூலை 05, 2025 11:04 AM
ADDED : ஜூலை 05, 2025 12:23 AM

சென்னை, தேசிய அளவில் நடந்து வரும், யு - 16 டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சென்னை வீராங்கனை தீப்தி வெங்கடேஷன் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
அகில இந்திய டென்னிஸ் சங்கம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து, 16 வயதுக்கு உட்பட்ட, இருபாலருக்குமான 'ரானே தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்' தொடரை, திருச்சி, ஜெய்ஸ் டென்னிஸ் நிறுவனத்தில் நடத்துகின்றன.
இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி, நேற்று முன்தினம் நடந்தது. முதல் போட்டியில், சென்னையின் தீப்தி வெங்கடேஷன், கர்நாடகாவின் ரீட் ஜவரை எதிர்த்து களமிறங்கினார். இதில், 6 - 1, 6 - 0, என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற தீப்தி வெங்கடேஷன், அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு ஒற்றையர் காலிறுதி போட்டியில், சென்னை வீராங்கனை தனுஸ்ரீ சதீஸ் 6 - 3, 6 - 7, 1 - 6 என்ற செட் கணக்கில், எதிர்த்து விளையாடிய, மற்றொரு தமிழக வீராங்கனை ஜெசிகா மெர்சி ராஜசேகரிடம் வீழ்ந்தார்.
அதன்பின் நடந்த மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில், தீப்தி வெங்கடேஷன் - தனுஸ்ரீ சதீஸ் ஜோடி, கர்நாடகாவின் எஷிதா ஸ்ரீயாழா - அய்லின் மரியம் கொர்னேலியோ ஜோடியை, 6- - 3, 6 - -4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, இறுதி போட்டிக்குத் தகுதி பெற்றனர்.