/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளை மாரத்தான் போட்டி போக்குவரத்தில் மாற்றம்நாளை மாரத்தான் போட்டி போக்குவரத்தில் மாற்றம்
நாளை மாரத்தான் போட்டி போக்குவரத்தில் மாற்றம்
நாளை மாரத்தான் போட்டி போக்குவரத்தில் மாற்றம்
நாளை மாரத்தான் போட்டி போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஜன 05, 2024 12:54 AM
சென்னை, சென்னை ரன்னர்ஸ் சார்பில், நான்கு பிரிவுகளாக மாரத்தான் போட்டி நாளை காலை, 4:00 மணி முதல் நடக்கவுள்ளதால், அன்றைய தினத்தில் வாகன போக்குவரத்தில் சில மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
காவல் துறை செய்திக்குறிப்பு:
அடையாறிலிருந்து வரும் வாகனங்கள், திரு.வி.க., பாலம், டி.ஜி.எஸ்., தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜர் சாலை வழியாக வழக்கம் போல் செல்லலாம்
போர் நினைவிடத்தில் இருந்து, திரு.வி.க., பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும் வாகனங்கள், கொடி மரச்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு - வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை வழியாக செல்லலாம்
ஆர்.கே.சாலையில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள், வி.எம்.தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும். அவ்வாகனங்கள், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் கார்னர், ஆர்.கே.மட் சாலையில் வழியாக செல்லலாம்
மத்திய கைலாஷிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி செல்ல முடியாது. அவ்வாகனங்கள், எல்.பி., சாலை சாஸ்திரி நகர், திருவான்மியூர் சிக்னல் வழியாக செல்லலாம்
காந்தி மண்டபத்தில் இருந்து வரும் வாகனங்கள், உத்தமர் காந்தி சாலை செல்ல அனமதிக்கப்படாது. அவ்வாகனங்கள், எல்.பி., சாலை வழியாக திருப்பி விடப்படும்
பெசன்ட் நகர், 7வது அவென்யூவில் இருந்து வரும் வாகனங்கள் எலியட்ஸ் பீச் நோக்கி அனுமதிக்கப்படாமல், எம்.ஜி.,சாலை வழியாக திருப்பி விடப்படும்
மாநகர பேருந்துகள் மட்டும் பெசன்ட் நகர் பணிமனைக்கு அனுமதிக்கப்படும். பெசன்ட் அவனெ்யூ, எம்.எல்.,பார்க் நோக்கி அனுமதிக்கப்படாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.