/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கதிர்வேடை சுற்றி 31 இடங்களில் 'சிசிடிவி' கேமரா கதிர்வேடை சுற்றி 31 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
கதிர்வேடை சுற்றி 31 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
கதிர்வேடை சுற்றி 31 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
கதிர்வேடை சுற்றி 31 இடங்களில் 'சிசிடிவி' கேமரா
ADDED : ஜூன் 04, 2025 12:22 AM
புழல், புழல், கதிர்வேடு சத்தியமூர்த்தி நகர் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில், குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையிலும், சமூக விரோதிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் வகையிலும், 31 இடங்களில், 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் செயல்பாட்டை, கொளத்துார் துணை கமிஷனர் பாண்டியராஜன், நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.
பாண்டியராஜன் கூறுகையில், ''பகுதி மக்கள் வெளியூர் செல்லும்போது, அதுகுறித்த தகவலை காவல்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். வீட்டருகே சந்தேக நபர்கள் சுற்றித்திரிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.