/உள்ளூர் செய்திகள்/சென்னை/வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'
வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'
வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'
வாலிபரை வெட்டிய வழக்கு மேலும் இருவருக்கு 'காப்பு'
ADDED : ஜன 31, 2024 12:12 AM
கொடுங்கையூர், சென்னை கொடுங்கையூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ், 23. கடந்த 17ம் தேதி இரவு, கொடுங்கையூர், ஜி.என்.டி., சாலை அருகே சென்ற போது, மர்ம கும்பல் சரண்ராஜை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியது.
இதில், பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கொடுங்கையூர் போலீசார், கமல், 28, தினேஷ்குமார், 22, யுவராஜ், 23, ஸ்டீபன், 19, பாலாஜி, 20, ஆகியோரை ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கொடுங்கையூரை சேர்ந்த ஸ்ரீபிரசாந்த், 21, புழல் பகுதியைச் சேர்ந்த தீபக், 23, ஆகியோரை கொடுங்கையூர் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.