/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறைக்குள் கஞ்சா கடத்திய கைதியின் தங்கை மீது வழக்கு சிறைக்குள் கஞ்சா கடத்திய கைதியின் தங்கை மீது வழக்கு
சிறைக்குள் கஞ்சா கடத்திய கைதியின் தங்கை மீது வழக்கு
சிறைக்குள் கஞ்சா கடத்திய கைதியின் தங்கை மீது வழக்கு
சிறைக்குள் கஞ்சா கடத்திய கைதியின் தங்கை மீது வழக்கு
ADDED : ஜூன் 15, 2025 08:32 PM
புழல்:புழல் சிறையில் உள்ள கைதிகள் நேர்காணல் அறை அருகே, சந்தேகம்படும் படி சுற்றித்திரிந்த தாகீர் இஸ்லாம், 26, என்கிற கைதியை, சிறை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்தனர்.
அதில், அவரிடம் கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிந்தது. இது குறித்து சிறை அதிகாரிகள் விசாரித்தனர். இதில், சிறையில் உள்ள புவனேஷ்வர், 28, என்கிற கைதியை காண, அவரது தங்கை மோனிஷா, 24, சிறைக்குள் வந்தபோது, அவரது உள்ளாடைக்குள் கஞ்சாவை பதுக்கி வைத்து கொண்டு வந்துள்ளார்.
பின், அறிவழகன், 31, என்கிற மற்றொரு கைதியின் உறவினரான பிரகாஷ், 38, என்பவரிடம் கஞ்சாவை கொடுத்துள்ளார். பிரகாஷ், சிறைக்குள் கஞ்சா பொட்டலத்தை துாக்கி வீசியபோது, தாகீர் இஸ்லாம் அதை பிடித்து மறைத்து வைத்துள்ளார்.
இது குறித்து சிறை அதிகாரிகள், புழல் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார், மோனிஷா, பிரகாஷ், தாகீர் இஸ்லாம், புவனேஷ்வர், அறிவழகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து, தாகீர் இஸ்லாமிடம் இருந்த, 37 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.