/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்சாரம் பாய்ந்து அதிகாரி பலி ஜூஸ் கடை ஓனர் மீது வழக்கு மின்சாரம் பாய்ந்து அதிகாரி பலி ஜூஸ் கடை ஓனர் மீது வழக்கு
மின்சாரம் பாய்ந்து அதிகாரி பலி ஜூஸ் கடை ஓனர் மீது வழக்கு
மின்சாரம் பாய்ந்து அதிகாரி பலி ஜூஸ் கடை ஓனர் மீது வழக்கு
மின்சாரம் பாய்ந்து அதிகாரி பலி ஜூஸ் கடை ஓனர் மீது வழக்கு
ADDED : ஜூன் 05, 2025 12:15 AM

சென்னை, ஈரோடு மாவட்டம், பவானி அருகே, மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மகன் பிரகாஷ்ராஜ், 31; கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கவுசல்யா என்ற மனைவியும், தக் ஷன் என்ற ஏழு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
பிரகாஷ்ராஜ் பணிபுரிந்து வரும் தனியார் காப்பீடு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை கோபாலபுரத்தில் உள்ளது. அங்கு நடந்த அலுவலக ஊழியர்கள் கூட்டத்தில் பங்கேற்க, நண்பர்களுடன், இரு தினங்களுக்கு முன் சென்னை வந்து, நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார்.
நேற்று முன் தினம் இரவு, 7:45 மணியளவில், நுங்கம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே உள்ள, கடை ஒன்றில், நண்பர் ஆனந்த் கார்த்திக் என்பவருடன், டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது, அந்த கடைக்கு அருகே உள்ள ஜூஸ் கடையில் பொருத்தப்பட்டு இருந்த விளம்பர பலகையை தொட்டுள்ளார். மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து, பிரகாஷ்ராஜ் தந்தை வெள்ளையன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், ஜூஸ் கடை உரிமையாளர்கள் மனோஜ்குமார், ஷாருஹாசன் ஆகியோர், அலட்சியமாக மின்சாரம் பாயக் கூடிய வகையில், விளம்பர பேனர் வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இருவர் மீது, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.