/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நலவாரிய உறுப்பினராக முகாம் ஆதரவற்ற பெண்களுக்கு அழைப்பு நலவாரிய உறுப்பினராக முகாம் ஆதரவற்ற பெண்களுக்கு அழைப்பு
நலவாரிய உறுப்பினராக முகாம் ஆதரவற்ற பெண்களுக்கு அழைப்பு
நலவாரிய உறுப்பினராக முகாம் ஆதரவற்ற பெண்களுக்கு அழைப்பு
நலவாரிய உறுப்பினராக முகாம் ஆதரவற்ற பெண்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 05, 2025 12:33 AM
சென்னை, சென்னை மாவட்டத்தில் உள்ள விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கான நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், 12ம் தேதி நடக்கிறது.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டை, ஆதார் நகல், மொபைல் போன் எண்ணை, www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து, உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
உறுப்பினராகும் பயனாளிகளுக்கு, பல்வேறு திறன் பயிற்சி, சுயதொழில் திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர், இம்முகாமில் பங்கேற்று உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.