/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள்களால் விபத்து அபாயம் மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள்களால் விபத்து அபாயம்
மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள்களால் விபத்து அபாயம்
மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள்களால் விபத்து அபாயம்
மின் கம்பங்களில் கட்டப்படும் கேபிள்களால் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 05, 2025 11:55 PM
வில்லிவாக்கம்,வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில், பிரதான சாலைகள் உட்பட 100 தெருக்கள் உள்ளன. இங்குள்ள மின் கம்பங்களில், தனியார் நிறுவனங்கள், தொலை தொடர்பு நிறுவனங்கள், அதிகப்படியான கேபிள்களை கட்டியுள்ளன.
பல இடங்களில், ஏற்கனவே பழுதான நிலையில் உள்ள மின் கம்பங்களில் இந்த கேபிள்களை அதிக கட்டியுள்ளதால், பளு தாங்காமல், அவை சாயும் நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மின் வாரியத்தின் கம்பங்களில் தனியார் நிறுவனங்கள், கேபிள் ஒயர்களை கட்டியுள்ளன. இவை, குடியிருப்பு வாயல்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தாழ்ந்து தொங்குகின்றன.
மின் கம்பங்களில் மாதாமாதம், நிர்வாகப் பொறியாளர்கள் மற்றும் விநியோக பொறியாளர்கள் கவனிக்க வேண்டும். ஆனால் இதை, மின் வாரியத்தினர் முறையாக கண்காணிப்பது கிடையாது.
விபத்துக்கு முன், இதுபோன்ற நிலை உள்ள மின் கம்பங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.