/உள்ளூர் செய்திகள்/சென்னை/2023ல் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம்2023ல் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
2023ல் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
2023ல் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
2023ல் 9.11 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
ADDED : ஜன 03, 2024 12:17 AM
சென்னை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு, 3 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். கடந்த 2015 முதல் 2018 வரை 2 கோடியே 80 லட்சத்து 52 ஆயிரத்து 357 பேரும், 2019-ம் ஆண்டில் 3 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 628 பேரும், 2020ல் 1 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரத்து 982 பேரும் பயணித்துள்ளனர்.
கடந்த 2021ல் 2 கோடியே 53 லட்சத்து 3,383 பேரும், 2022-ல் 6 கோடியே 9 லட்சத்து 87 ஆயிரத்து 765 பேரும் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் சேவை துவங்கிய எட்டு ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவிற்கு, 2023ம் ஆண்டில் மட்டும், 9.11 கோடி பேர், மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர்.
2022ம் ஆண்டை விட 2023ம் ஆண்டில் 3.01 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளனர்.
2015ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, 25 கோடியே 1 லட்சத்து 17 ஆயிரத்து 72 பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.