ADDED : செப் 24, 2025 03:46 AM
பம்மல் : தீக்காயம் அடைந்த தம்பதி, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனகாபுத்துார், அண்ணாதுரை தெருவை சேர்ந்தவர் கிருபாகரன், 35. அவரது மனைவி, கீர்த்தனா, 25, ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவியிடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், கீர்த்தனா லைசால் திரவத்தை உடலில் தெளித்து கொண்டு, காஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.
அப்போது, அவரது ஆடையில் தீ பரவி, வயிறு, மார்பு பகுதியில் தீ பற்றியது. இதை பார்த்த கிருபாகரன், தீயை அணைக்க முயன்றார். அதில், அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இருவரின் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.