/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உயிர் பலி வாங்க காத்திருக்கும் உடைந்த வடிகால்வாய் மூடிகள் உயிர் பலி வாங்க காத்திருக்கும் உடைந்த வடிகால்வாய் மூடிகள்
உயிர் பலி வாங்க காத்திருக்கும் உடைந்த வடிகால்வாய் மூடிகள்
உயிர் பலி வாங்க காத்திருக்கும் உடைந்த வடிகால்வாய் மூடிகள்
உயிர் பலி வாங்க காத்திருக்கும் உடைந்த வடிகால்வாய் மூடிகள்
ADDED : செப் 15, 2025 12:51 AM

மணலி; முக்கிய சந்திப்பில், மழைநீர் வடிகால்வாய் மூடிகள் உடைந்திருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மணலி மண்டலம், 21வது வார்டு, ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவில் திரும்பும் சந்திப்பில், பல மாதங்களாக, சாலையின் குறுக்கே செல்லும் மழைநீர் வடிகால்வாயின் இரண்டு மூடிகள் உடைந்த நிலையில் உள்ளன.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளத்தை கண்டு திடுக்கிடுகின்றனர். மழை நேரத்தில், மழைநீர் தேங்கி வடிகால்வாய் மூடி உடைந்திருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள், பாத சாரிகள் விழுந்து காயமடைகின்றனர்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், இச்சாலையில், 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த சமயத்தில், மழைநீர் வடிகால்வாய் மூடி உடைந்துள்ளதை கவனிக்காமல் செல்லும் பாதசாரிகள், தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, பல மாதங்களாக உடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் மூடியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.