/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னையில் லஞ்ச வீடியோ வைரல்: துணை கமிஷனர் எச்சரிக்கை சென்னையில் லஞ்ச வீடியோ வைரல்: துணை கமிஷனர் எச்சரிக்கை
சென்னையில் லஞ்ச வீடியோ வைரல்: துணை கமிஷனர் எச்சரிக்கை
சென்னையில் லஞ்ச வீடியோ வைரல்: துணை கமிஷனர் எச்சரிக்கை
சென்னையில் லஞ்ச வீடியோ வைரல்: துணை கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 24, 2024 12:53 PM
சென்னை: சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீசார் மஞ்சள் பை மூலம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்லும் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்காமல், அருகில் உள்ள மஞ்சள் பையில் லஞ்ச பணத்தை போட்டு செல்லுமாறு போலீசார் கூறுகின்றனர். அவர்களும் அப்படியே பணத்தை போட்டு செல்கின்றனர். இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து போக்குவரத்து துணை கமிஷனர் சுதாகர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாகன சோதனையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.