/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம் பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED : செப் 25, 2025 12:55 AM

சென்னை :திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர், வெங்கடேசப் பெருமாள் கோவிலில் நேற்று, புரட்டாசி மாத பிரம்மோத்சவம் கோலாகலமாக துவங்கியது.
தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. திருமலையில் நடப்பது போல, இக்கோவிலிலும் ஆண்டுதோறும் பிரம்மோத்சவம் விமரிசையாக நடத்தப்படும்.
இந்த ஆண்டிற்கான பிரம் மோத்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடந்தது. பிரம்மோத்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை பீடசேஷ வாகனத்தில், பெருமாள் அருள்பாலித்தார்.
இன்று காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், நாளை முத்துப் பந்தலிலும், 27ம் தேதி கல்ப விருட்சத்திலும் உலா வந்து அருள்பாலிக்கிறார்.