/உள்ளூர் செய்திகள்/சென்னை/கழிப்பறையில் கால் சிக்கிய சிறுவன் மீட்புகழிப்பறையில் கால் சிக்கிய சிறுவன் மீட்பு
கழிப்பறையில் கால் சிக்கிய சிறுவன் மீட்பு
கழிப்பறையில் கால் சிக்கிய சிறுவன் மீட்பு
கழிப்பறையில் கால் சிக்கிய சிறுவன் மீட்பு
ADDED : பிப் 11, 2024 12:18 AM
மயிலாப்பூர், மயிலாப்பூர், லஸ் கார்னரைச் சேர்ந்தவர் வினோத்; பிரபல கார் கம்பெனி செய்தி தொடர்பாளர். இவரது மனைவி பவித்ரா. இவர்களது மகன் தீரன், 4.
நேற்று முன்தினம் மாலை, கழிப்பறைக்கு சென்ற சிறுவன் தீரன், தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, சிறுவனின் கால் இந்திய முறை கழிப்பறையின் பீங்கான் துளைக்குள் சிக்கிக்கொண்டது.
தகவலறிந்து, மயிலாப்பூர் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்தனர்.
பின், சுத்தியல் மூலம் பீங்கான் கழிப்பறையை உடைத்து, சிறுவனை காயமின்றி நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர்.