/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆம்புலன்சில் போன் திருடிய சிறுவன் கைது ஆம்புலன்சில் போன் திருடிய சிறுவன் கைது
ஆம்புலன்சில் போன் திருடிய சிறுவன் கைது
ஆம்புலன்சில் போன் திருடிய சிறுவன் கைது
ஆம்புலன்சில் போன் திருடிய சிறுவன் கைது
ADDED : மே 25, 2025 12:20 AM
வியாசர்பாடி :வியாசர்பாடி, எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கைலாச பாண்டியன், 30. இவர், '108' ஆம்புலன்ஸ் ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு, பெரியார் நகர் மருத்துவமனையில் இருந்து, நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட வயதான பெண் ஒருவரை, மேல் சிகிச்சைக்காக சென்ட்ரல் ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தார்.
பின், ஜீவா ரயில்வே ஸ்டேஷன், ஏ.ஏ.சாலை அருகே வாகனத்தை நிறுத்தி, ஓட்டுனர் சந்தோஷ்குமார் மற்றும் கைலாச பாண்டியன் துாங்கி உள்ளார். பின் காலை எழுந்து பார்த்தபோது, ஆம்புலன்ஸ்சில் இருந்த இரண்டு மொபைல்போன்கள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து விசாரித்த வியாசர்பாடி போலீசார், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த காமேஷ், 20, மற்றும் 15 வயது சிறுவனை கைது செய்தனர்.