/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாரி ஓட்டுநரின் போன் திருடிய சிறுவன் கைது லாரி ஓட்டுநரின் போன் திருடிய சிறுவன் கைது
லாரி ஓட்டுநரின் போன் திருடிய சிறுவன் கைது
லாரி ஓட்டுநரின் போன் திருடிய சிறுவன் கைது
லாரி ஓட்டுநரின் போன் திருடிய சிறுவன் கைது
ADDED : ஜூன் 13, 2025 12:31 AM
கோயம்பேடு, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 25; லாரி ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், ராஜசேகரின் மொபைல் போன் மற்றும் 4,700 ரூபாயை திருடி சென்றனர். கோயம்பேடு போலீசாரின் விசாரணையில் இரு சிறுவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. 14 வயது சிறுவனை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.