ADDED : மே 22, 2025 12:17 AM
புழல்,புழல், ஜீவராமன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 49; தனியார் நிறுவன ஊழியர். காவாங்கரை, மாரியம்மன் 4வது தெருவில் உள்ள, தான் பணிபுரியும் நிறுவனத்தின் அருகே, கடந்த 10ம் தேதி மதியம், தன் டி.வி.எஸ்., ஜூபிட்டர் ஸ்கூட்டரை நிறுத்தி, அலுவலகத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தபோது, ஸ்கூட்டர் மாயமாகி இருந்தது.
இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், வாகனத்தை திருடிச் சென்றது, 17 வயது சிறுவன் என்பதும், சீனிவாசனின் ஸ்கூட்டர் மட்டுமின்றி மற்றொருவரின் ேஹாண்டா பைக்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், சிறுவனை நேற்று முன்தினம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.