/உள்ளூர் செய்திகள்/சென்னை/அம்பத்துார் செய்தியின் பாக்ஸ் கொளத்துார் சாலையிலும் திடீர் பள்ளம்அம்பத்துார் செய்தியின் பாக்ஸ் கொளத்துார் சாலையிலும் திடீர் பள்ளம்
அம்பத்துார் செய்தியின் பாக்ஸ் கொளத்துார் சாலையிலும் திடீர் பள்ளம்
அம்பத்துார் செய்தியின் பாக்ஸ் கொளத்துார் சாலையிலும் திடீர் பள்ளம்
அம்பத்துார் செய்தியின் பாக்ஸ் கொளத்துார் சாலையிலும் திடீர் பள்ளம்
ADDED : ஜன 05, 2024 12:37 AM

கொளத்துாரில் இருந்து ஜி.கே.எம் காலனி செல்லும் முக்கிய சாலையான ராஜிவ்காந்தி நகர் சாலையில் சிலந்தி குட்டை அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் சாலையில், பாதாள சாக்கடை பூமிக்குள் இறங்கியதால் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இப்பள்ளம் நேற்று மேலும் பெரிதானது. குறிப்பிட்ட இடத்தை தடுப்பு வைத்து விபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளம் விழுந்த இடத்திலிருந்து சில மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடக்கின்றன. அதிகாரி ஒருவர் கூறுகையில், '30 ஆண்டுகளுக்கு மேலான பாதாள சாக்கடை என்பதால் பலம் இழந்து விட்டது. மற்றபடி மெட்ரோ பணிக்கும் இப்பள்ளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றார்.