/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புத்தக காட்சி - நுால் அறிமுகம் - தாமரை பிரதர்ஸ் புத்தக காட்சி - நுால் அறிமுகம் - தாமரை பிரதர்ஸ்
புத்தக காட்சி - நுால் அறிமுகம் - தாமரை பிரதர்ஸ்
புத்தக காட்சி - நுால் அறிமுகம் - தாமரை பிரதர்ஸ்
புத்தக காட்சி - நுால் அறிமுகம் - தாமரை பிரதர்ஸ்
ADDED : ஜன 08, 2025 12:42 AM

அர்த்தமுள்ள ஆன்மிகம்
ஆசிரியர்: பி.சுவாமிநாதன் பக்கம்: 296, விலை: ரூ.420
நம் தேசத்தின் முதுகெலும்பே ஆன்மிகம் தான் என்பார் சுவாமி விவேகானந்தர். அந்த எலும்பு இன்று முறிந்து போயிருக்கிறது. ஆன்மிகம் பற்றிய தெள்ளத்தெளிவான அறிவு இருக்குமானால், சண்டை சச்சரவுகளுக்கு இடமில்லை; இந்த உலகம் அமைதிப்பூங்காவாக இருக்கும்.
குடும்பத்தில் நிம்மதி இருக்கும். அந்த அறிவை ஊட்டுவதே இந்த நுாலின் நோக்கம். சனி பகவான் தரும் துன்பத்தைக் கடந்து, கிரகங்கள் தரும் நன்மையை எப்படி நாம் அடைவது என்பதற்கும், இந்நுாலில் பதில் உள்ளது.
மகளிர் ஆரோக்கியமும் மருத்துவத் தீர்வுகளும்
ஆசிரியர்: கீதா கெங்கையா பக்கம்: 280, விலை: ரூ.380
உடலாலும், மனதாலும் பெண்கள் பல சிரமங்களை சந்திக்கின்றனர். குறிப்பிட்ட வயதிற்கு முன்பே, பெண் குழந்தைகள் பூப்பெய்து விடுகின்றனர்.
உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,மாதவிடாய் நேரத்தில், சில குழந்தைகளுக்கு தாங்க முடியாத வலியை தவிர்க்கும்வழிகள், கர்ப்பிணியர் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான உணவுகள் உள்ளிட்டவை குறித்து, இந்நுாலில் விளக்கப்பட்டு உள்ளது.